நீங்க சுத்தமான சமையல்காரரா? எப்படி அறிவது?

படம்
வீட்டில் உள்ளவர்களையும், பதிவுகலகத்தில் உள்ளவர்களையும் பயப்படுத்த என்றே பல செய்முறைகளை தொடர்ந்து சமைத்து, வலைப்பூவில் எழுதி வருகின்றேன் என்பது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை. எப்பவும் செய்முறையே போட்டால் சுவாரசியமாக இருக்காதே. ஒரு மாற்றத்திற்கு உங்களை வேறு சில வழிகளிலும் பயப்படுத்தலாம் என யோசித்திருக்கின்றேன். அதன் முதல் படியாக, நீங்கள் சுத்தமான சமையல்காரரா என எப்படி கண்டு பிடிப்பது என பார்க்கலாம்.
கீழ் வருபவற்றுக்கு ஆம் இல்லை என பதில் அளிக்கவும்.
1. பெரிய சமையல்காரர் போல படம் காட்டி சமைத்த பின்னர் உடனடியாக உபயோகித்த சமையல் பாத்திரங்களை நீரில் கழுவி வைக்கின்றீர்களா?
2. சமையலில் குளிக்காமல் இருக்க ஏப்ரன் பயன்படுத்துகின்றீர்களா?
3. கேக் போன்றவற்றை செய்யும் போது, சட்டியில் மீதி இருக்கும் கலவையை விரலால் தொட்டு உண்பீர்களா?
4. முக்கியமா சமைக்க ஆரம்பிக்க முன்னர் கைகளை நன்றாக கழுவுகின்றீர்களா?
5. காய்கறி வெட்டும் பலகையை அடிக்கடி நீரில் கழுவுகின்றீரளா?
6. காய்கறிகளை சுத்தம் பண்ணிய பின்னர் வெட்டுகின்றீர்களா?
பதில்கள்:
6-5 ஆம் சொல்லியிருப்பின் = சுத்தமோ சுத்தம் போங்க
4-5 ஆம் சொல்லியிருப்பின் = ம்ஹிம் பரவாயில்ல
3-4 ஆம் சொல்லியிருப்பின் = சரி பொழச்சு போங்க
2-3 ஆம் சொல்லியிருப்பின் = ம்ம் ஹிம் இது வேலைக்கு ஆகாது
1-2 ஆம் சொல்லியிருப்பின் = திருந்துங்கய்யா திருந்துங்க
0-1 ஆம் சொல்லியிருப்பின் = பக்கத்தில இருக்கிற மருத்துவமனை எதுங்க?



13 comments:
ஹ்ம், நான் சுத்தமா சாப்பிடுவேன். பரவாயில்லையா?
ஏன்னா, என் பெயர் தூயா இல்லை:-P
5 ஆம்
ஏப்ரான் அப்படின்னா என்ன? அதுமட்டும் தெரியலை அதனால ஆன்ஸர் பண்ணலை
:)
//1. பெரிய சமையல்காரர் போல படம் காட்டி சமைத்த பின்னர் உடனடியாக உபயோகித்த சமையல் பாத்திரங்களை நீரில் கழுவி வைக்கின்றீர்களா?//
இதுலியே தெரியுது முன்னனுபவம் இல்லைன்னு. கல்யாணம் கட்டிகிட்டா, சமையல் பாத்திரங்களை ரங்கமணி (சாப்பிட்டவுடன்) கழுவி வைப்பார். ஏன்னா, அந்த வண்டிகள் சமையல் வாசனை அடிச்சா சாப்பிட்டாத் தான் ஓடும்;)
//2. சமையலில் குளிக்காமல் இருக்க ஏப்ரன் பயன்படுத்துகின்றீர்களா?//
இல்லை, வென்டிலேட்டரும் ஏசியும்;-)
So, 6/6.
ஏப்ரன் = apron
ம் பரவாயில்லை ரகம் நான்...4 ஆம் தான்
/
Thooya said...
ஏப்ரன் = apron
/
Ippadhaan Image search panni paathen,
Oh neenga veetula idhellaam pottukinu thaan samaipeengalaa??
kashtam
:((
இதுக்குப் பயந்துதான் நான் ஹோட்டல்லயே சாப்பிடுறேன் தூயா :)
ரிஷான், உங்களுக்காகவே உணவு விடுதிகள் பற்றி ஒரு பதிவு போடலாம் போல ;)
பபா, நான் தான் சமையல்கட்டுகுள்ளயே போறதில்லையே, எப்டி இத்தன கேள்விக்கு பதில் சொல்றது? வேணும்ணா பெரிய அண்ணண் கூகுள் கிட்டயே இதுக்கும் பதில் கேட்டு சொல்லட்டுமா?
நல்லா சொல்லியிருக்கீங்க தூயா,//
உங்களுக்காகவே உணவு விடுதிகள் பற்றி ஒரு பதிவு போடலாம் போல ;)/
ஆமாம், அயித்தான் அதைப்பற்றி சொல்வாங்க.கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஜோண்ணா, எங்க பெரியண்ணா ரகசியத்தை இப்படியா வெளியே சொல்வது.. :P
சுத்தம் சோறு போடுமா? :)
//சுத்தம் சோறு போடுமா? :)//
சோறு நீங்க தான் போடணும் :P
Post a Comment