கள் + கப்பா + மீன்கறி
எங்க ஊரில் மரவள்ளிகிழங்கை அவித்து, அதில் தேங்காய் பூ, செத்தல், கறிவேப்பிலை, உள்ளி போட்டு உரலில் இடித்து எடுப்பார்கள். அதன் சுவையை விஞ்ச வானுலகத்தில் கூட ஒரு அமிர்தம் கிடையாது. என்ன இந்த அமிர்தம் பயங்கரமான உறைப்பாக இருக்கும். கண்ணில் நீர் வரும் வரை செய்துவிடும் சக்தி இதற்குண்டு. அதிலும் தோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட (திருடப்பட்டால் இன்னும் சிறப்பு என என் அண்ணன் ஒருவர் சொல்லி தந்தார்) மரவள்ளி கிழைங்கை அவித்து, இடித்தால்...அப்பப்பா... (என்ன இங்கு திருடுவதற்கு கிழங்கு தோட்டம் தான் கண்ணில் தென்படவேயில்லை)
அதே போல கேரளத்தில் மிகவும் பிரபலமாக உணவு கப்பாவும் மீன்கறியும் தானாம். (இதை கானாஸ் உறுதி செய்வார் என நம்புவோம்). வீதியோர கடையாகட்டும், படகு வீடாகட்டும், நட்சத்திர விடுதியாகட்டும் கப்பா இல்லாத இடம் கிடையாதாம். அதிலும் சிறப்பாக கள்ளு குடிப்பவர்களுக்கு சிறப்பாக செய்து கொடுப்பார்களாம். அனுபவம் உள்ளவர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல, நண்பர் தீபக் குடுத்த செய்முறையை பரீட்சித்ததன் பலன் தான் இந்த பதிவு. இனி செய்முறைக்கு போகலாம்.
கப்பாவிற்கு தேவையானவை:
மரவள்ளிகிழங்கு 500 கிராம்
மஞ்சள்தூள் 1/2 தே.க
கறிவேப்பிலை 2 கெட்டு
பச்சைமிளகாய் 3
தேங்காய்பூ 1/4 கப்
வெங்காயம் 1 (சிறியது)
செத்தல்மிளகாய் 2
கடுகு 1/2 தே.க
கப்பா எப்படி செய்வது:
1. கிழங்கை சிறுதுண்டுகளாக வெட்டி, நீரில் அவிக்க வேண்டும். அவிக்கும் போது நீரில் உப்பையும், மஞ்சளையும் சேர்க்க வேண்டும். எப்போதும் ஒற்றுமையா இருப்பது தான் அழகு. பிரிப்பது ஆகாது. அதனால் அவிக்கும் போதே மஞ்சளை சேர்த்திடுங்க.
2. கிழங்கு நன்றாக அவிந்ததும், அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். இறக்கிய பின்னர், நீரை வடித்தெடுங்கள்.
3. மிளகாய், தேங்காய், வெங்காயத்தை நன்றாக அரைத்தெடுங்கள்.
4. ஒரு சட்டியில் அரைத்த விழுதையும், கிழங்கையும் போட்டு மசித்தெடுக்க வேண்டும்.
5. இன்னொரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, செத்தல்மிளகாய், கறிவேப்பிலையை தாளித்து மசித்த கிழங்குடன் சேர்த்தால் கப்பா ஆயத்தமாகிவிடும்.
கப்பாவுடன் சாப்பிடுவதற்கு சிறந்தது மீன்கறி தான். அது தான் சமையல்கட்டில் ஏற்கனவே வைத்தாகிவிட்டதே. சும்மா சொல்ல கூடாது ஜோடி பொருத்தம் அமோகம் தான் போங்க. கப்பாவிற்கும், மீன்கறிக்கும் செய்முறை தந்திட்டால் போதுமா, கள்ளுக்கு எங்கே போவது என கேட்கபடாது. இப்பவே சொல்லிட்டேன். கள் என்றதும் இந்த பக்கம் வந்தவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் "தண்ணி குடியுங்க...குடிதண்ணி குடியுங்க. உடலிற்கும் உங்க குடும்பத்திற்கும் ரொம்ப நல்லது" கிகிகிகி
சொல்லமறந்தது: கப்பா என்றால் மரவள்ளிகிழங்காம்



28 comments:
மரவள்ளிக்கிழங்கு ஊரில் எங்கட வீட்டு பின் வளவில் இருக்கு. கேரளாவில நான் போகேக்கை பார்க்க கிடைக்கேல்ல.
கேரளாவின் நான் பார்த்த கள்ளுக்கடை
http://ulaathal.blogspot.com/2007/01/blog-post.html
பதிவின் தலைப்பில் கள் என்ற சொல்லை உபயோகித்து பதிவை சூடாக்கும் தூய்ஸை கண்டிக்கிறேன்.
//பதிவின் தலைப்பில் கள் என்ற சொல்லை உபயோகித்து பதிவை சூடாக்கும் தூய்ஸை கண்டிக்கிறேன்.//
யோசனை தந்தவங்களே கண்டிக்கிறாங்களே. என்ன கொடுமை இது!!1 :P
//"தண்ணி குடியுங்க...குடிதண்ணி குடியுங்க. உடலிற்கும் உங்க குடும்பத்திற்கும் ரொம்ப நல்லது" //
எந்த தண்ணினு தெளிவா சொல்லுங்க பபா. இல்லைன்னா அதுலயும் குழப்பம் வந்துரும்...
மரவள்ளி கிழங்கு நம்ம ஊர்ல கிடைக்கும், நம்ம தோட்டத்துல கூட பயிரிடுவாங்க. ஊருக்கு போரப்ப செய்யச் சொல்லுறேன்.
கள்னா என்னப்பா? மர'வள்'க்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் ?
(இன்னொரு நாளைக்கு எங்கட மரவள்ளி சமையல் குறிப்பும் போடுங்கோ தூயா )
சுதந்திரத்தை கொண்டாடுவோம்!
சுதந்திர தினநல்வாழ்த்துக்கள்!
http://mohideen44.blogspot.com
//எந்த தண்ணினு தெளிவா சொல்லுங்க பபா. இல்லைன்னா அதுலயும் குழப்பம் வந்துரும்...//
கிணற்று நீர்
(போதுமா?கிகிகிகி)
//ஊருக்கு போரப்ப செய்யச் சொல்லுறேன்.//
ஏன் என்னையை அங்கனையும் மாட்டிவிடவா :P
எங்கடா பிள்ளை திரிந்திடுச்சு போலன்னு சந்தோசமா தலைப்பை பார்த்து உள்ளே வந்தால்...........
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சேச்சி அடிபொலி
தூயா,சும்மா சொல்லக்கூடாது.உங்க சமையல் குறிப்புக்கள் சூப்பர்.நான் ஊர்ல சாப்பிட்ட ஞாபகம்.நீங்க திரும்ப ஞாபகப்படுத்திட்டீங்க.
மரவள்ளிக்கிழங்கு வாங்கி சமைச்சுப் பாக்கப்போறேன்.விபரீதம் ஏதாவது ஆகாமல் இருக்க வேணும் கடவுளே.
இங்க நீலம் பாரிச்ச கிழங்குக்கும் மெழுகு பூசி வச்சிருக்கிறாங்கள்.
//இங்க நீலம் பாரிச்ச கிழங்குக்கும் மெழுகு பூசி வச்சிருக்கிறாங்கள்.
//
தோலுரித்திருக்குமா?
இல்லை.தோல் உரிக்காமல்தான்.பயமில்லையா?
அதுசரி தூயா, பிரபா சாப்பாட்டுப் பிரியரோ!சாப்பாட்டுப் பகுதில அவரோட பெயர் அடிக்கடி அடிபடுதே!
இங்கு எமக்கு உடனே கிடைக்கின்றது. அதனால் பயமில்லை. அங்கு எப்படி?
நல்ல கேள்வி..இதற்கு கானாஸே பதில் அளிப்பார் என நம்புவோம் :P
தூயா! அரைக்கிலோ மரவள்ளிக்கிழங்கு வாங்கி வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று முழித்துக்கொண்டிருந்தேன். நல்ல ரெசிப்பி கொடுத்திருக்கிறீர்கள். செய்து பார்த்து, சாப்பிட்டும் பார்த்து சொல்கிறேன். சபரிமலை ஏறும்போது
பசிக்கு அங்கு கிடைத்த புழுங்கலரிசிக் கஞ்சியும் வேகவைத்து ஸ்பிளிட் பண்ணி அதில் ஊறுகாய் ஜூஸை சாஸ் மாதிரி ஊத்திக் கொடுத்த மரவள்ளிக்கிழங்கும் ருசியோ ருசி!!
//
சபரிமலை ஏறும்போது
பசிக்கு அங்கு கிடைத்த புழுங்கலரிசிக் கஞ்சியும் வேகவைத்து ஸ்பிளிட் பண்ணி அதில் ஊறுகாய் ஜூஸை சாஸ் மாதிரி ஊத்திக் கொடுத்த மரவள்ளிக்கிழங்கும் ருசியோ ருசி!!
//
இது எனக்கு புதிய தகவல்...நீங்க எப்போ மலை ஏறினிங்க?
enaku therinju mara valli kilangum, kappa kilangum vera vera kizhangu..
kappa kizhangu na tapioca.. aana maravalli kizhagu vera.. enga oor pakkam valli kizhangu nu kuda solluvanga..
anbudan
Maragathavalli
மரகதவள்ளி, வாருங்கள். நலமா?
வள்ளி கிழங்கு என்பது எங்க ஊரில் வேறு, மரவள்ளி கிழங்கு வேறு..tapioca = மரவள்ளி கிழங்கு
இப்போ ஒரே குளப்பமா இருக்கு :) ஊருக்கு ஒரு பேர் வச்சு குழப்புறாங்கப்பா...கிகிகிகி
மர வள்ளிக்கிழங்குல தோசை கூட செய்யலாம். நல்லா இருக்கும்.
//
மர வள்ளிக்கிழங்குல தோசை கூட செய்யலாம். நல்லா இருக்கும்.
//
எப்படி என சொல்வீர்களா?? :)
கள்ளும் , கப்பாவும், கறிமீனும் என கேரளாவில் ஒரு காம்போ மீல்ஸ் உண்டே
//மரகதவள்ளி, வாருங்கள். நலமா?
வள்ளி கிழங்கு என்பது எங்க ஊரில் வேறு, மரவள்ளி கிழங்கு வேறு..tapioca = மரவள்ளி கிழங்கு
இப்போ ஒரே குளப்பமா இருக்கு :) ஊருக்கு ஒரு பேர் வச்சு குழப்புறாங்கப்பா...கிகிகிகி//
மரவள்ளி கிழங்கு = கப்பக் கிழங்கு = tapioca
http://en.wikipedia.org/wiki/Image:Manihot_esculenta_dsc07325.jpg
வள்ளி கிழங்கு = சக்கரை வள்ளிக் கிழங்கு = Sugar Beet (a.k.a Sweet Potato in India)
http://en.wikipedia.org/wiki/Image:SugarBeet.jpg
Hope this helps...
//மரகதவள்ளி, வாருங்கள். நலமா?
வள்ளி கிழங்கு என்பது எங்க ஊரில் வேறு, மரவள்ளி கிழங்கு வேறு..tapioca = மரவள்ளி கிழங்கு
இப்போ ஒரே குளப்பமா இருக்கு :) ஊருக்கு ஒரு பேர் வச்சு குழப்புறாங்கப்பா...கிகிகிகி//
மரவள்ளி கிழங்கு = கப்பக் கிழங்கு = tapioca
http://en.wikipedia.org/wiki/Image:Manihot_esculenta_dsc07325.jpg
வள்ளி கிழங்கு = சக்கரை வள்ளிக் கிழங்கு = Sugar Beet (a.k.a Sweet Potato in India)
http://en.wikipedia.org/wiki/Image:SugarBeet.jpg
Hope this helps...
//
Hope this helps...
//
நிச்சயமாக...குளப்பம் தீர்ந்தது. மிக்க நன்றி :)
//நிச்சயமாக...குளப்பம் தீர்ந்தது. மிக்க நன்றி :)
//
Yet, there was a small confusion.
It is indeed called Sweet Potato or Yam .
Correct picture can be found here.
http://en.wikipedia.org/wiki/Image:Ipomoea_batatasL_ja01.jpg
இந்த வாரத்துல செஞ்சுட்டு போஸ்ட் போடறேன்
இந்த ஆத்தா மலை ஏறியது எட்டு வருசத்துக்கு முந்தி.
Post a Comment