Tuesday, September 02, 2008

சமையலறையில் காத்திருக்கும் பொறிகள்




பொதுவாகவே சமையல் என்பது மிகவும் இலகுவான வேலை போலவும், சமைப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் போன்றதொரு மாயையும் உலாவுகின்றது. இதை சமையல் செய்யும் ஒருவரால் ஒத்துக்கொள்ள முடியாது.

ஒரு வீட்டில்,கிராமத்தில்,நகரத்தின்,நாட்டின் பாரம்பரியத்தையோ/கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள சிறந்த இடம் சமையல் தான் என்பது என் கருத்து.

இப்படிப்பட்ட சமையல் என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. ஒரு உணவை சமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் ஒரு தற்கொலையோ,பல கொலைகளோ நிகழ வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த பதிவில் எப்படி தற்கொலையை தவிர்க்கலாம் என பார்ப்போம். கொலைகள் பற்றி பின்னர் யோசிக்கலாம்.கிகிகிகி

* சமைக்கும் போது சமையலை மட்டும் பார்க்கவும். கவனம் இல்லாவிடில் களத்தில் பலமாக காயம் அடையும் சாத்தியம் அதிகம்.
* காய்கறி வெட்டும் போது வெட்டுப்பலகையை உபயோகிக்கவும்.
* வெதுப்பியை போடும் போது தேவையான சூட்டிற்கு வைத்தல் அவசியம். வெதுப்ப வேண்டியதும் கருகி, கையும் கருகும் வாய்ப்பு அதிகம். (சொந்த அனுபவம்)
* வெதுப்பியில் வேலை செய்யும் போது மறக்காமல் கைகவசம் அணியுங்கள். வேலை முடிந்ததும் வெதுப்பியை மறக்காமல் நிறுத்துங்கள்.
* சமைக்கும் போது நீரை சமையல்கட்டில் கீழே ஊற்றுவதையோ,தெளிப்பதையோ தவிருங்கள். வீணாக காலையோ இடுப்பையோ உடைப்பதில் இருந்து தப்பிக்கலாம்.
* கத்திகளை கண்ட இடத்தில் போட்டு வைக்காதீர்கள். அதற்கென ஒரு இடத்தில் வையுங்கள். முடிந்தால் கத்தி கவசங்களை வாங்கி, மாட்டி வையுங்கள்.
* சமைக்கும் போது முடியை மடித்து கட்டி வையுங்கள். நீளமுடி இருப்பவர்கள் அதிகம் கவனமாக இருக்க வேண்டும்.
* சுடு எண்ணெயில் சமையல் செய்யும் போது, நீண்ட கைபிடி கொண்ட அகப்பைகளை பயன்படுத்துங்கள்.
*சுடு நீரை கையாளும் போது மிகவும் கவனமாக இருங்கள்.
* சமைத்த உடன் எதையும் சுட சுட வாயில் போடாதீர்கள்.

இவற்றையெல்லாம் பின்பற்றி சமையல் செய்யும் தருணத்தில் ஒரு தற்கொலையை தவிர்க்கலாம் என்பது என்னால் உறுதிப்படுத்தப்படுகின்றது. (சொந்த அனுபவம்). அடுத்த பதிவில் எப்படி கொலைகளை தவிர்க்கலாம் என்பதை பார்ப்போம்..
:)

17 comments:

துளசி கோபால் said...

போர்க்'கலத்தில்' தற்காப்பு டெக்னிக் சொன்னது சூப்பர்.

வெற்றி இல்லையேல் வீர 'மரணம்'தான் இல்லை?:-)

கவிநயா said...

சமையல் பத்தி சூப்பரா சொன்னீங்க தூயா. நீங்க சொன்னதுலயே முதல் பாயிண்ட்தான் ரொம்ப முக்கியம். அதான் - கவனம். அது இருந்தா நீங்க சொன்ன மற்றதெல்லாம் சரியா ஆயிடும் :)

ஆயில்யன் said...

ஒ இம்புட்டு விசயம் இருக்கா!

மைண்ட்ல வைச்சுக்கிறேன் :)

Thooya said...

//வெற்றி இல்லையேல் வீர 'மரணம்'தான் இல்லை?:-)//

அதே அதே..கிகிகி

வந்தியத்தேவன் said...

பங்கு இதெல்லாம் சமையல் செய்பவர்களுக்குத் தானே என்னைப்போன்ற சாப்பாட்டு ராமன்களுக்கு இல்லையே

வந்தியத்தேவன் said...

பங்கு இதெல்லாம் சமையல் செய்பவர்களுக்குத் தானே என்னைப்போன்ற சாப்பாட்டு ராமன்களுக்கு இல்லையே

Thooya said...

பெரிய பங்கு, உங்களுக்கு இந்த பதிவு பயனளிக்காது..
ஆனால்
அடுத்த பதிவை மறக்காமல் பாருங்கள்
அதில் தான் கொலை பற்றி எழுத போகின்றேன்..கிகிகி

பூக்குட்டி said...

//பங்கு இதெல்லாம் சமையல் செய்பவர்களுக்குத் தானே என்னைப்போன்ற சாப்பாட்டு ராமன்களுக்கு இல்லையே//

அண்ணன் எங்கள் ஈரத்தளபதி வந்தியை கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.

Thooya said...

//அண்ணன் எங்கள் ஈரத்தளபதி வந்தியை கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.//

கன்னா என்றால் என்ன? பின்னா என்றால் என்ன என விளக்கவும் :P

வந்தியத்தேவன் said...

//பெரிய பங்கு, உங்களுக்கு இந்த பதிவு பயனளிக்காது..
ஆனால்
அடுத்த பதிவை மறக்காமல் பாருங்கள்
அதில் தான் கொலை பற்றி எழுத போகின்றேன்..கிகிகி//

வழிமேல் விழிவைத்து அந்தப் பதிவை எதிர்ப்பார்க்கின்றேன். சின்னத் தளபதி பூக்குட்டி கன்னா பின்னா விற்க்கு விளக்கம் அளிப்பாரா?

தாமிரா said...

தூயாவுக்கு வாழ்த்துகள். (ஆமா அதென்ன ஈரத்தளபதி?)

Thooya said...

வாருங்கள் தாமிரா..நலமா ?

//ஆமா அதென்ன ஈரத்தளபதி?)//

ஆகா பங்கு மாட்டிகிட்டார்...கிகிகி

தெய்வசுகந்தி said...

தூயா வெதுப்பின்னா என்ன ?
கத்திக்கும் எனக்கும் நல்ல ராசின்னு நினைக்கிறேன். எப்படியும் வாரத்துக்கு ஒரு முறையாவது ரத்தம் பாத்துரும்.

Thooya said...

சுகந்தி,
வெதுப்பி என்று oven ஐ தான் குறிப்பிட்டேன்.:)

ஹேமா said...

அடுப்படி என்றாலே....எதையோ எடுத்து எதையோ வெட்டி எதுக்குள்ளோ போட்டு...அப்பாடி...
போராட்டக் களம்தான்.கவனம் குறைந்தால் கொலைக்கோ தற்கொலைக்கோ சந்தர்ப்பம் உண்டு.

தூயா என் தளமும் கொஞ்சம் வந்து பாருங்களேன்.ஓ....கவிதை பிடிக்காதோ!www.kuzhanthainila.blogspot.com

Thooya said...

ஹேமா, உங்க வீட்டிற்கு வந்தேன் :) மிகவும் அழகு

Kumar said...

Very useful for me wife.
thanks sister

Design by Dzelque Blogger Templates 2008

தூயாவின்ட சமையல் கட்டு - Design by Dzelque Blogger Templates 2008