Monday, September 28, 2009

டின் மீன் கறி

ஹிம்ம்ம் இந்த பாழாபோன வேலையால என்னோட சமையற்கட்டை விட்டு பிரிந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை. கடைகளில் சாப்பிடுவதற்கு சாப்பிடாமல் இருக்கலாம் போல ஒரு வாரத்திலேயே தோன்றிவிட்டது. சரி நாம தான் சமையலில் ஒரு கரை கண்டவங்களாச்சேன்னு என்னோட ஹொட்டேல் சூட்லயே சமைக்க ஆரம்பிச்சாச்சு. அதனால என்ன சொல்றேன்னா....என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. அடிக்கடி இனிமேல் திடீர் சமையலோடு வருவோம்ல...

போனவாரம் சமைச்சது, மீன்கறி பழசுன்னாதான் ருசி. மறக்காம சாப்பிட்டு போங்க.கிகிகிகி



தேவையானவை:

டின் மீன் 1
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 3
தக்காளி 2
உள்ளி/வெள்ளை பூண்டு 4
கறிவேப்பிலை 15 இலைகள்


மிளகாய் தூள் 2 மே.க
மல்லி தூள் 1 மே.க
மஞ்சள் தூள் 1/2 தே.க
சின்ன சீரகம் 1/2 தே.க
கடுகு 1/2 தே.க
எண்ணெய் சிறிதளவு
நீர் 1 கோப்பை
உப்பு தேவையான அளவு

செய்முறை:

1. முதல்ல டின் மீனை வலை போட்டு ஒரு கடையில இருந்து பிடிச்சிட்டு வரணும்.

2. வெங்காயத்தை தோலுரிச்சு, நீளமாக வெட்டி எடுக்கணும். அதோட மிளகாயையும் நான்காக நீளவாக்கில் வெட்டி எடுக்கணும்.

3. இப்போ மீதி இருக்கிற தக்காளியை வெட்டணும்னு நான் சொல்லுவேன்னு எதிர்பாக்கிறிங்களா? அப்படின்னா நீங்க இன்னமும் சமையலில் ஒரு அப்பிராணி, இல்லைன்னா நீங்க சமையல்ல ஒரு புலி.[கவனம்:வலையில் புலி எதிர்ப்பாளர்கள் அதிகம்]

- தக்காளியை சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளுங்கள்.

4. உள்ளியை தோல் உரித்து, விழுதாக அரைத்து எடுங்க. இதோட ஆயத்த வேலைகள் முடிந்தது. இனி:

5. அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு சட்டியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்குங்க.

6. கடுகை முதலில் போட்டு வெடிக்க விடவும். பின்னர் முறையே சீரகம்,அரைத்த உள்ளி, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு நன்றாக வதக்குங்க. நன்றாக வதங்கி வரும் போது சட்டியில் இருக்கும் கலவை அரைத்த விழுது போல வந்திருக்கும்.

7. இந்த கலவையோடு முதலில் மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடத்திற்கு அவிய விடுங்க.
பின்னர் தூள்களையும் உப்பையும் நீரையும் சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்க.


அப்புறம் என்ன? அம்புட்டு தான். கறிய 4 பேருக்கு சாப்பிட குடுத்தமா, அவங்கள கொன்னமா என இருங்க. நாம சமையல் பழகனும்னா 4 பேர போட்டு தள்ளின குற்றம் இல்லையாக்கும்.கிகிகிகிகி

28 comments:

ரங்கன் said...

yummy...!!


//அப்புறம் என்ன? அம்புட்டு தான். கறிய 4 பேருக்கு சாப்பிட குடுத்தமா, அவங்கள கொன்னமா என இருங்க. நாம சமையல் பழகனும்னா 4 பேர போட்டு தள்ளின குற்றம் இல்லையாக்கும்.//

உங்க ஐடியாலஜி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..!!

♥ தூயா ♥ Thooya ♥ said...

//உங்க ஐடியாலஜி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..!!//

கிகிகிகி தங்கு தங்கு :P

ஆயில்யன் said...

//சரி நாம தான் சமையலில் ஒரு கரை கண்டவங்களாச்சேன்னு///

என்னது ஒரு கரையா ? தங்கச்சி நீங்க இன்னும் ஸ்டார்டிங்கலதான் இருக்கீங்கோ மறு கரைக்கு வரணும்! :))))))))

♥ தூயா ♥ Thooya ♥ said...

//என்னது ஒரு கரையா ? தங்கச்சி நீங்க இன்னும் ஸ்டார்டிங்கலதான் இருக்கீங்கோ மறு கரைக்கு வரணும்! :)))))))//

ஒரு கரைன்னு தானே சொன்னோம்.....எந்த கரைன்னு சொல்லலையே ;)

புதுகைத் தென்றல் said...

கறிய 4 பேருக்கு சாப்பிட குடுத்தமா, அவங்கள கொன்னமா என இருங்க. நாம சமையல் பழகனும்னா 4 பேர போட்டு தள்ளின குற்றம் இல்லையாக்கும்.//

good policy

குசும்பன் said...

//டின் மீன் கறி//

சாப்பிடவில்லை என்றால் முதுகில் டின் கட்டப்படும் என்று ஒரு போர்டு இருந்துச்சாமே:)))

குசும்பன் said...

//செல்ல வேண்டிய நிலை. கடைகளில் சாப்பிடுவதற்கு சாப்பிடாமல் இருக்கலாம் போல ஒரு வாரத்திலேயே தோன்றிவிட்டது. //

கடையில் சாப்பிட்டதால் ஒரு வாரத்தில் அப்படி தோன்றியது, உங்க சமையலை சாப்பிட்டால் அந்த ஒருவேளையிலேயே தோன்றி இருக்கும்:)

குசும்பன் said...

//சரி நாம தான் சமையலில் ஒரு கரை கண்டவங்களாச்சேன்னு //

ஆங் நீங்க கரை கண்டவர், சாப்பிட்டவர்கள் கரை காணாமல் மூழ்கியவர்கள்!!!

குசும்பன் said...

//கடுகை முதலில் போட்டு வெடிக்க விடவும். //

கடுகு சவுண்டு சின்னதா இருக்கும், தீபாவளி வருது ஆகையால் கொஞ்சம் யானை வெடி போட்டு வெடிக்கவிடலாமா?

♥ தூயா ♥ Thooya ♥ said...

பொறாமைக்காரர் ஒருத்தரு இங்கிட்டு பொழம்பிட்டு இருக்காருடா :P

வேந்தன் said...

//குசும்பன் said...
கடையில் சாப்பிட்டதால் ஒரு வாரத்தில் அப்படி தோன்றியது, உங்க சமையலை சாப்பிட்டால் அந்த ஒருவேளையிலேயே தோன்றி இருக்கும்:)//
குசும்பன், அப்படி தோன்றுவதற்கு சாப்பிட்டவர் உயிருடன் இருக்க வேண்டுமே!

இய‌ற்கை said...

:-)

இய‌ற்கை said...

//போனவாரம் சமைச்சது, மீன்கறி பழசுன்னாதான் ருசி//



ம்ம்..போனவருசம் சமைச்சதா இருந்தா:-)))

Jaleela said...

துயா வெகு நாட்கள் ஆச்சு உங்கள் குறிப்பு வந்து .

ம்ம் அசத்தலான டின் மீன் குறிப்பு சூப்பர்,.

ஹர்ஷினி அம்மா said...

கொஞ்சம் நாள் இடைவெளிக்கு பிறகு உங்க குறிப்பு பார்ப்பதில் மகிழ்ச்சி....கூடவே உங்க
/நாம சமையல் பழகனும்னா 4 பேர போட்டு தள்ளின குற்றம் இல்லையாக்கும்/

நல்லா இருக்கு....அதேதான்.

♥ தூயா ♥ Thooya ♥ said...

//குசும்பன், அப்படி தோன்றுவதற்கு சாப்பிட்டவர் உயிருடன் இருக்க வேண்டுமே!//


ஏன் வேந்தன் இப்படி? நீங்களுமா!! :P


//ம்ம்..போனவருசம் சமைச்சதா இருந்தா:-)))//
என்னா ஒரு சந்தேகம்! போனவருசம் சமைச்சதுன்னா சாப்பிடாமலே ஆள் காலி..கிகிகி



//துயா வெகு நாட்கள் ஆச்சு உங்கள் குறிப்பு வந்து .

ம்ம் அசத்தலான டின் மீன் குறிப்பு சூப்பர்,.//

வாங்க ஜலீலா..நலம் தானே??



///நாம சமையல் பழகனும்னா 4 பேர போட்டு தள்ளின குற்றம் இல்லையாக்கும்/

நல்லா இருக்கு....அதேதான்.//

நீங்களாவது புரிஞ்சுகிட்டிங்களே ..கிகிகி

Suresh Kumar said...

நாலு பெற போட்டு தள்ள ஒரு சமையலா ஹாஆஆஆஅ

மாதேவி said...

தூயா மீன் கறி சுவையாக இருக்கிறது.

"முதல்ல டின் மீனை வலை போட்டு ஒரு கடையில இருந்து பிடிச்சிட்டு வரணும்." நன்றாய் ரசித்தேன்.

நாமக்கல் சிபி said...

:)

//அப்புறம் என்ன? அம்புட்டு தான். கறிய 4 பேருக்கு சாப்பிட குடுத்தமா, அவங்கள கொன்னமா என இருங்க. நாம சமையல் பழகனும்னா 4 பேர போட்டு தள்ளின குற்றம் இல்லையாக்கும்.//

ஐ லைக் திஸ்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல ருசி

gulf-tamilan said...

கடையில் சாப்பிட்டதால் ஒரு வாரத்தில் அப்படி தோன்றியது, உங்க சமையலை சாப்பிட்டால் அந்த ஒருவேளையிலேயே தோன்றி இருக்கும்
:))))))))))))))))

பிரியமுடன்...வசந்த் said...

இதுதான் நான் அடிக்கடி சமைக்குறது ஏன்னா சீக்கிரமா சமைச்சு முடிச்சுடலாம்...

சந்ரு said...

அதிக சுவையாய் இருக்கின்றது...

நாமக்கல் சிபி said...

//கடுகு சவுண்டு சின்னதா இருக்கும், தீபாவளி வருது ஆகையால் கொஞ்சம் யானை வெடி போட்டு வெடிக்கவிடலாமா?//

லட்சுமி வெடி போட்டா இன்னும் ஜபர்தஸ்தா இருக்காது?

அன்புடன் மலிக்கா said...

அப்ப கொடுத்து குற்றம் செய்யலாம்
[சமையலைத்தாங்க] முதல் முறைதானே திரும்ப வருவேன்

நீங்களும் வாங்கோ எங்கபக்கம்
http://niroodai.blogspot.com/

கால்கரி சிவா said...

இந்த டின்மீன் பயங்கரமா நாறுமே.... நான் தங்கியிருக்கிற சூட்லே ஒரே டின் மீன் நாத்தம்..ஒரு வேளே நீங்க தானோ அது

மா.குருபரன் said...

//அப்புறம் என்ன? அம்புட்டு தான். கறிய 4 பேருக்கு சாப்பிட குடுத்தமா, அவங்கள கொன்னமா என இருங்க. நாம சமையல் பழகனும்னா 4 பேர போட்டு தள்ளின குற்றம் இல்லையாக்கும்//

சூப்பர் ஜடியா..

சுவையான சாப்பாடுங்க..

Jaleela said...

தூயா ந‌ல‌ம் தான் அப்ப‌ அப்ப‌ வாங்க‌ என் ப‌க்க‌மும் அடிக்க‌டி.டின் மீனுக்கு பிற‌கு ப‌ல‌மா ப‌ரிசோத‌னை போல‌

எங்கே அடுத்த‌ ச‌மைய‌ல‌ காணும்.