இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

உறவுகள் அனைவருக்கும் இனிய தைதிருநாள் வாழ்த்துகள். மறக்காமல் கொஞ்சம் சக்கரை பொங்கலையும் சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்..
இலகு சக்கரை பொங்கல் செய்முறை...2007 இல் பதிவிட்ட செய்முறை..ஆனால் பொங்கல் இன்று செய்தது தான். நம்பி சாப்பிடலாம்..கிகிகி
தேவையான பொருட்கள்:
அரிசி = 1 பேணி
வறுத்த பாசி பயறு = 1/3 பேணி
சர்க்கரை = 1 பேணி
தேங்காய் பால் = இ பேணி
நீர் = 3 பேணி
Cashewnuts = 2 மே.க
Raisins = 2 மே.க
செய்முறை:
1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும்.
2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது] பாலும், சர்க்கரையும் சேர்ந்த பின்னர் அடுப்பின் வெப்பத்தை குறைக்கவும். பொங்கல் சட்டியில் ஒட்டி எரிவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆகவே அடிக்கடி அகப்பையால் கிளறிவிடவும்.
3. அரிசி நன்றாக வெந்ததும், அதில் நெய்யையும் Cashewnuts & Raisins யும் சேர்த்து கிளறி அடுப்பின் இருந்து இறக்கவும்.
சுவையான சர்க்கரை பொங்கல் ஆயத்தம். சாமிக்கு படைக்காமல் சாப்பிட்டால் பாவம் கிடைக்கும்!


8 comments:
பொங்கல் வாழ்த்துக்கள்.
நேற்று கூட உங்களது பழைய சர்க்கரைப் பொங்கல் இடுகையை வாசித்து revise பண்ணிகிட்டோம்.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கலோ பொங்கல். பொங்கல் வாழ்த்துகள். ஆனால் இம்முறை ஈழத்தமிழர்கள் பலர் பொங்கலை கொண்டாடவில்லை என்பதுதான் உண்மை.
தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் தூயா.
சுவையான சக்கரை பொங்கல் ..
அருமை
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
ரசிக்கும் வகையில் மிகவும் ரசனையுடன் பதிவிட்டு இருக்கீங்க .வாழ்த்துக்கள் !
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
துயா நலமா?
பேணி என்றால் என்ன?
ரொமப அருமையான சர்கக்ரை பொஙக்ல்.
Post a Comment