Saturday, October 09, 2010

பாவக்காய் பாக்கறி


என் தொல்லை இல்லாமல் இருந்த சமையல்கட்டிற்கு (உங்களுக்கும்)மறுபடியும் கெட்ட காலம். என்ன பண்ண? நவராத்திரி விரத காலமாயிற்றே, சமையல்கட்டிற்கு வராமல் இருக்க முடியுமா? விரதகாலம், சைவ சாப்பாடு. நேற்று வைத்த பாவக்காய் பாக்கறி உங்களுக்காக.

பாக்கறி = பால்+கறி

தேவையான பொருட்கள்:
பாவக்காய் 1
வெங்காயம் 1/2 பெரியது
மிளகாய் 1
தக்காளி 1/2 பெரியது
கறிவேப்பிலை 10 இலைகள்
தேங்காய் பால் 3 தே.க
மஞ்சள்தூள் 1/2 தே.க
பெரும் சீரகம் 1 தே.க
உப்பு தேவைக்கேற்ப


செய்முறை:
1. பாவக்காயை சுத்தம் செய்து உங்களுக்கு வேண்டிய அளவில் & வடிவத்தில் வெட்டி எடுங்கள். கசப்பை சகிப்பது கடினம் எனில் சிறிய துண்டுகளாக இருப்பது நல்லது.
2. வெங்காயம், மிளகாய், தக்காளியை பொடியாக வெட்டிக்கொள்ளுங்கள்.
3. ஒரு சட்டியில் 1/2 கோப்பை நீரை ஊற்றி அடுப்பை பற்ற வையுங்கள். (அடுப்பை மட்டும் தான், தம்மை அல்ல)
4. வெட்டிய பாவக்காய், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை; மற்றும் பெரும் சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
5. பாவக்காய் பாதி வெந்ததும், தக்காளியை சேருங்கள்.
6. பாவக்காய் வெந்ததும், பாலை சேர்த்து கொதி நிலை வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
7. அம்புட்டு தான் மக்கா, கசப்பா இருந்தாலும் சகிச்சிட்டு சாப்பிட பாருங்க. உடல்நலத்திற்கு ரொம்பவே நல்லதுன்னு நல்லவங்க, பெரியவங்க சொல்றாங்க.

குறிப்புகள்:
* தேங்காய் உடைக்கும் போது அதில் வரும் நீரை எடுத்து பாவக்காயை வேக வைத்தால் கசப்பு குறையும்.
* வேக வைக்கும் போது சிறிதளவு சீனி(சக்கரை) சேர்த்தாலும் கசப்பு குறையும்.

ஒரு கொடியை தூக்க தூக்க ஓராயிரம் பாவக்காய்.. பாவக்காயை பற்றிய வரலாறு, சமூகக்கல்வி ஆகியவற்றை அறிய விரும்பின்: CLICK

10 comments:

வந்தியத்தேவன் said...

என் மருமகளை மீண்டும் வரவேற்கின்றேன்

Jaleela Kamal said...

தூயா வெகு நாட்கல் ஆச்சு நீங்கள் குறீப்பு போட்டு. தேங்காய் பால் சேர்த்து செய்வது கசப்பு தெரியம இருகும் இல்லையா?

♥ தூயா ♥ Thooya ♥ said...

பெரியபங்கு, நலம் தானே? நன்றி நன்றி...வந்திட்டோம்ல ;)

ஜலீலா,
வேலைப்பளு காரணமாக வெகுநாட்களாக எழுதவில்லை. தற்போது கொஞ்சம் நேரம் கிடைத்தது, அதனால் எழுதுகின்றேன்...
பால் சேர்த்தால் கசப்பு கொஞ்சம் குறையும் தான்.

வரவனையான் said...

கிகிகி... அது எப்படித்தான்னு தெரியலை பாவக்காய்ன்னு பேசினாக்கூட எனக்கு தெரிஞ்சுடுது....

தேங்காய்பால் சேர்த்து சமைப்பது புதிய குறிப்பாய் இருக்கு றை பண்ணிட்டா போகுது

yarl said...

வணக்கம் தூயா,
இப்ப அண்மைக்காலமாய் தான் உங்கள் பதிவுகளை வாசித்தேன். எல்லாம் எனக்கு பிடித்த சாப்பாடுகள் தான். கனகாலம் நீங்கள் ஒரு பதிவும் போடேலை. அடிகடி நானும் வந்து வந்து பார்ப்பேன். உங்கட சில கறிகள் செய்தும் பார்த்திருக்கிறன் நல்லாய் வந்தது. நன்றிகள். அனால் நண்டுக்கறி மாத்திரம் பிரண்டு தடிச்சு வரமாட்டன் எண்டு அடம் பிடிக்குது. அடிகடி வந்து போங்கோ ப்ளீஸ்.

அன்புடன் மங்கை

மாதேவி said...

இது நமது இலங்கைச் சமையல்.

அருமை தூயா.

வீட்டில் செய்துகொள்வோம்.

♥ தூயா ♥ Thooya ♥ said...

வரவனை, உலகில எங்க இருந்தாலும் பாவக்காய் என்றால் உடனே இங்கே தரிசனம் தரும் இரகசியம் என்ன? ;)

தேங்காய்பால் அல்லது தேங்காய் இளனி சேர்க்கலாம்..

U.P.Tharsan said...

நன்றி தூயா ;-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாகற்காயா? பாவக்காயா?; பால்+கறி= பாற்கறி எனத் தானே வரும்.
கசப்புடன் சாப்பிடுவதே மருத்துவப் பலனையளிக்கும்.

♥ தூயா ♥ Thooya ♥ said...

பாகற்காயா? பாவக்காயா?; பால்+கறி= பாற்கறி எனத் தானே வரும்.

அந்த அளவிற்கு எனக்கு தமிழ் தெரியாது. எப்படி சொல்வோமோ அப்படி எழுதினேன்.

இனி திருத்தி கொள்கின்றேன் :) நன்றி