
தேவையான பொருட்கள்:
அவித்த மீன் அல்லது மக்கரேல் டின் மீன் 1
வேக வைத்து மசித்த உருளை கிழங்கு 400 கிராம்
சிறிதாக வெட்டிய வெங்காயம் 1 கப்
சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 2 மே.க
சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 2 மே.க
மிளகு தூள் 2 தே.க
பெரிய சீரகம் 1 தே.க
பாண்தூள் Bread Crumbs
முட்டை 2
பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
உப்பு தேவைக்கேற்ப
முன்னரே தயார்படுத்தி கொள்ள வேண்டியவை:
1. முட்டையை உடைத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக அடித்து கொள்ளுங்கள்.
2. பாண் தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
3. பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்று வையுங்கள்.
செய்முறை:
1. ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக சூடாக்கி பெரும் சீரகத்தை போடுங்கள்.
2. அத்துடன் மீன், மிளகுத்தூள்,கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் & உப்பு சேர்த்து நன்றாக கிளறி எடுங்கள். அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 3-5 நிமிடங்கள் போதுமானது.
3. சூடு சற்று ஆறியதும் உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.
4. முட்டையில் தோய்த்து எடுத்து பின்னர் பாண் தூளில் போட்டு பிரட்டி எடுங்கள்.
5. பொரிப்பதற்கு எண்ணெயை சூடாக்கி கட்லெட்டை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுங்கள்.
6. சூட்டோட்டு சாப்பிட்டு வாயை புண்ணாக்காமல் ஓரளவு சூடு ஆறியதும் சாப்பிடுங்கள்.
பிகு:
1.கட்லட்டை செய்து பொரிக்காமல் குளிர்சாதனப்பெட்டியில் 2 நாட்களுக்கு வைக்கலாம்.
2. டின் மீன் போடாமல் உடனே வாங்கிய மீனை அவித்து போட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
3. மிளகுத்தூள் உடனடியாக தூளாக்கி போட்டால் சுவை வித்தியாசமாக இருக்கும்.
4. மிளகுத்தூளுக்கு பதிலாக தேவைக்கேற்ப மிளகாய்தூளும், சிறிதளவு மஞ்சள் தூளும் சேர்க்கலாம்.
7 comments:
Sorry Wrong No :-)
kikiki you don't like it?
இப்பிடித்தான் நானும் செய்வேன் தூயா. உங்கட செய்முறையில் உருளைக்கிழங்கை மறந்து போனிங்கள். அல்லது நீங்கள் முதலே மீனோட உருளைக்கிழங்கை சேர்த்து மசித்து வைப்பிங்களா?
அன்புடன் மங்கை
I am vegetarian Panku
ஹை மீன் கட்லட் எனக்கு பிடித்தது. அருமையாக இருக்கு ..
தூயா
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_02.html
தூயா
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_02.html
Post a Comment